Loading...
பெங்களூரில் இருந்து தமிழுக்கு வந்துள்ள ஷைனி 2 படங்களில் நடித்து வருகிறார். இதுபற்றி கூறிய அவர்….“ விஜய் ஆண்டனி நடித்த ‘இந்தியா- பாகிஸ்தான்’ படத்தில் 2-வது முன்னணி பாத்திரத்தில் நடித்தேன். இப்போது ‘மியாவ்’ ‘வீரய்யன்’ படங்களில் நடித்து வருகிறேன்.
‘மியாவ்’ படம் நகரத்து கதை. இதில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறேன். ஓரளவு கவர்ச்சியாக நடித்திருக்கிறேன். ‘வீரய்யன்’ படம் கிராமத்து கதை. இதில் தனி கதாநாயகியாக நடித்திருக்கிறேன். நான் தொடர்ந்து கதைக்கு தேவையான அளவு கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன்.
Loading...
கர்நாட மாநிலத்தை சேர்ந்த பெண் என்றாலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஆக வேண்டும். என்பது தான் எனது ஆசை” என்றார்.
Loading...