Loading...
பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதிக்கு இன்று பிறந்தநாள். இவர் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பாகத்தில் ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடித்திருந்தால் இவருடைய கதாபாத்திரம் பலராலும் வரவேற்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் பாகத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராணாவின் பிறந்தநாளையொட்டி ‘பாகுபலி’ படக்குழுவினர் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க முன்வந்தனர். அதன்படி, அவர் நடித்து வரும் ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தில் அவருடைய கதாபாத்திரத்தை சித்தரித்து அப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
Loading...
ஏற்கெனவே, ‘பிரபாஸ்’ பிறந்தநாளின்போதும் அவருடைய புதிய போஸ்டரை வெளியிட்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். தற்போது ராணாவுக்கும் அதையே படக்குழுவினர் பின்பற்றியுள்ளனர். பிறந்தநாளில் தன்னுடைய பிரத்யேக போஸ்டரை ‘பாகுபலி’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளது ராணாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Loading...