Loading...
நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் இலங்கை கொழும்பு மாவட்டத்தில் கட்டமைக்கப்பட்ட செயல்திட்டத்தின் கீழ் அரச மற்றும் தனியார்துறை பணியாளர்களுக்கு போக்குவரத்து வசதிகளை இலங்கை போக்குவரத்து சபை செய்து கொடுக்கவுள்ளது.
இந்த நிலையில் தமது பணிகளை ஆரம்பிக்கவுள்ள அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் இலங்கை போக்குவரத்துசபையின் இணையத்தின் ஊடாக பதிவுசெய்துகொள்ளவேண்டும்.
Loading...
அதன் ஊடாக பணியாளர்களின் எண்ணிக்கை, பயணிக்கவேண்டிய இடம், வீதி, மற்றும் தொடர்பு இலக்கங்கள் என்பன எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் தரப்படவேண்டும் வேண்டும் என்று இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் இணைய முகவரி – dgmoperation@sltb.lk.
Loading...