தற்போது உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உலகிலுள்ள மக்கள் அனைவரும் அச்சத்தின் பிடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் கிருமிகளை அழிக்க புதிய தொழில்நுட்பத்தை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது.
கிருமி நீக்கம் செய்ய விண்கலங்களை சுத்தம் செய்யப் பயன்படும் கருவியை பயன்படுத்தலாம் என்றும் இதனை முதலில் பாடசாலைகள், சிறைச்சாலைகள் போன்ற பொதுவான இடங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கருவிகளைக் கொண்டு மிக எளிதாக கிருமி நீக்கம் செய்யலாம் என நாசா அமைப்பின் தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் (Jim Bridenstine ) கூறியுள்ளார்.
கிருமிநீக்கம் செய்ய வேண்டிய அறைக்குள் இந்தக் கருவியை வைத்தால் அதிலிருந்து வெளிவரும் பனிமூட்டம் போன்ற புகை அங்குள்ள அத்தனை கிருமிகளையும் அழித்து விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.