அட்டாளைச்சேனையில் சுகாதாரக் கேடான முறையில் மாடுகள் அறுத்து விற்பனை செய்து வருவதாக பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் சுகுணனின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து நேற்று முதல் அமுலுக்குவரும் வகையில் அட்டாளைச்சேனையில் மாடுகள் அறுப்பதற்கு தடை விதித்து அட்டாளைச்சேனை வைத்திய அதிகாரி டாக்டர் இஸ்மாயில்க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனையில் மாடுகள் அறுப்பதற்கு ஏதுவாக சுகாதார சீர்கேட்டை சீர் செய்யும்வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும்..
அட்டாளைச்சேனையிலுள்ள மடுவத்தில், சுகாதாரத்துக்கு முரணான வகையில் இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவதாகவும், … சுகாதார பரிசோதகர் PHI கண்டு கொள்வதில்லை என்று பேசிய பேச்சு சர்ச்சை உண்டுபண்ணிதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் பணம் உழைக்கும் நோக்கில் மாட்டுக் காரனுகள் சுகாதாரக் கேடான முறையில் மாடுகளை அறுத்து விற்பது இறைவனுக்கும் பொருந்தாது.
இவ் உத்தரவை அடுத்தும் மாடுகளை கள்ளத்தனமாக அறுத்தால் உடன் போலிஸ் நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.