கனடா நாட்டில், உள்ள டொரோண்டோ நகரை சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவர் காலையில் நடைபயிற்சி சென்றுள்ளார்.
அப்போது, இவரது மார்பகத்தில் லேசான வலி எடுக்கவே, பக்கவாட்டில் தொட்டுப்பார்த்த சமயத்தில் இரத்தம் வந்துள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர் அவசர ஊர்தியின் மூலமாக அங்குள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவமனையில் பெண்மணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவரது இடது மார்பகத்தில் துப்பாக்கி குண்டு துளைத்து ஊடுருவ இயலாமல், மின்னல் வேகத்தில் வலது பக்க மார்பில் பாய்ந்து சென்று உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இதற்கு காரணமாக அவரது செயற்கை மார்பகங்கள் அவரது உயிரை பாதுகாத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 2018 ஆம் வருடத்தில் நடந்துள்ளது.
சண்டையிட்டுக் கொண்டிருந்த நபர்களால் இவர் சுடப்பட்டு இருக்கும்போது இவருக்கு செயற்கை மார்பகம் பொருத்தப்பட்டுள்ளதால் உணர்வு தெரியாமல் அவர் தப்பித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.