சுகாதார கட்டுப்பாடுகளை மீறி மன்னார் சென்று பெண் ஒருவரை அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில்காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்திகோத்தர் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதுடன் சுயதனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்தவாரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டநிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இராணுவ புலனாய்வுப்பிரிவின்தகவலின்பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மானிப்பாயைச்சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர் அழைத்து வந்த பெண்ணும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த பெண் கொரோனா அபாய வலயமான புத்தளத்திலிருந்து மன்னாருக்கு படகு வழியாக வந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரால் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.