Loading...
பிரித்தானியாவில் விரைவாக பரவி வரும் கொரோனா தாக்கத்தினால் இதுவரை 20,732 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த அந்த நாடு பல நடவடிக்கைகள் எடுத்தும், இதுவரை கொரொனா கட்டுக்குள் வரவில்லை.
பிரித்தானியாவில் சுமார் 25 இலங்கையர்கள் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாக பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Loading...
பிரித்தானிய குடியுரிமை பெற்று நீண்டகாலமாக அங்கு வாழ்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவிலுள்ள சுமார் 900 இலங்கையர்கள் நாடு திரும்ப விரும்புவதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாணவர்கள், பயிற்சிக்காக சென்ற மருத்துவர்கள், சுற்றுலா சென்றவர்கள் இந்த வகைக்குள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...