Loading...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து ஒரு வருடத்தின் பின்னர் பயங்கரவாதி சஹ்ரானின் பயிற்சி முகாமொன்று மூதூரில் கண்டறியப்பட்டுள்ளது.
கைதான சஹ்ரான் குழு முக்கியஸ்தரான சாதிக் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த விடயம் தெரிய வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மாவனெல்ல புத்தர்சிலை உடைப்பில் இவர் முக்கிய சந்தேகநபர் ஆவார்.
Loading...
இவர் 2014 ல் துருக்கி வழியாக சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ் பயிற்சி பெற்றார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பயிற்சி நிலம் அமைந்துள்ள பகுதி மாவனெல்ல பகுதியை சேர்ந்த மதகுரு ஒருவருக்கு சொந்தமானது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மாவனெல்ல பகுதியை சேர்ந்த 5 இளைஞர்கள் அந்த முகாமில் பயிற்சி பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...