Loading...
சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட காணி பிரச்சினையால் மூத்த சகோதரர் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் – இபலோகம பகுதியில் இடம்பெற்ற இந்த கொடூர சம்பவத்தில் 45 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
Loading...
இளைய சகோதரருக்கும் மூத்த சகோதரருக்கும் இடையில் காணி பிரச்சினை காணப்பட்டதாகவும், குறித்த பிரச்சினை நேற்றைய தினம் வாய்தர்க்கமாக மாறியமையை தொடர்ந்து இளைய சகோதரர் தனது அண்ணாவை தாக்கி கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்த சகோதரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Loading...