Loading...
ஹம்பாந்தோட்டை – தங்காலை பிரதேசத்தில் வசித்து வந்த கடற்படை அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தங்காலை சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் கஜதீர தெரிவித்துள்ளார்.
குறித்த கடற்படை அதிகாரி விடுமுறையில் கடந்த 20ஆம் திகதி தங்காலையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
Loading...
இவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும் கஜதீர குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடற்படை அதிகாரி நேற்று பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன் இன்று அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...