Loading...
ஸ்ரீலங்காவில் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 34 கொரோனா தொற்றாளர்களும் கடற்படையினர் என சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இதுவரை 557 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பொது மக்கள் அனைவரும் சமூக இடைவெளியினை தொடர்ந்தும் கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
Loading...
இதேவேளை, கொரோனா அறிகுறிகள் தென்படுமாயின் பொதுச் சுகாதார பரிசோதகர்களை உடனடியாக அணுகுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், பொதுமக்கள் தொடர்ந்தும் விழிப்பாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Loading...