துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் “வரனே அவசியமுண்ட”. இந்த படத்தில் இடம்பெறும் வளர்ப்பு நாய்க்கு ”பிரபாகரன் என பெயரிட்டிருப்பதாக வெளியான தகவல் தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாய்க்கு பிரபாகரன் என பெயரிட்டிருப்பது தமிழர்களையும், அவர்களது உரிமை போரையும் இழிவுபடுத்துவதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள துல்கர் சல்மான் யாரையும் இழிவுபடுத்த அந்த பெயர் வைக்கப்படவில்லை என்றும், தவறுதலாக நடந்துவிட்டது என கூறி மன்னிப்பும் கேட்டார்.
இருப்பினும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த காட்சியை படக்குழுவினர் நீக்க வேண்டும் என கூறியுள்ளார். அதேபோல துல்கரின் மன்னிப்பு பதிவில் பிரபாகரன் என்பது ஒரு காமெடி மீம் எனவும் தெரிவித்திருந்தார்.
எனவே சமூக வலைத்தளமான டிவிட்டரில், மலையாளிகளுக்கு பிரபாகரன் என்பது காமெடியாக இருக்கலாம் ஆனால், தமிழர்களுக்கு அது ஒரு எமோஷன் என #PrabhakaranIsTamilsIdentity என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
To all those who were offended. I apologise. And I also apologise on behalf of #VaraneAvashyamund and @DQsWayfarerFilm ! pic.twitter.com/erbjftlNbj
— dulquer salmaan (@dulQuer) April 26, 2020