பிரித்தானியாவின் முதல் திருநங்கை பெற்றோராக அறியப்படும் ஜோடி அயர்லாந்தில் இருந்து லண்டனுக்கு விரைவில் திரும்ப வேண்டும் என ஆர்வமாக உள்ளது தெரியவந்துள்ளது.
லண்டனை சேர்ந்தவர் Jake Graf (41). இவர் முன்னாள் ராணுவ வீரராகவும், நடிகராகவும் உள்ளார்.
இவர் மனைவி Hannah (33). Jake தன்னுடைய 20 களின் பிற்பகுதியில் பாலின மறுசீரமைப்பைத் தொடங்கி திருநங்கையாக மாறினார்.
அதே போல Hannah கடந்த 2013ல் திருநங்கையாக மாறினார். பின்னர் இருவரும் கடந்த 2018ல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த சூழலில் வேறு நபரின் உயிரணுக்கள் மூலம் முன்னரே பாதுகாக்கப்பட்ட Jake-ன் முட்டைகள் மூலம் உருவாக்கப்பட்ட கரு வாடகை தாயின் உடலில் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் Jake மற்றும் Hannah ஆகியோர் வடக்கு அயர்லாந்தில் இருந்த போது அவர்களின் வாடகைதாய்க்கு அங்கேயே சிசேரின் மூலம் கடந்த 14ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது.
ஆனால் கொரோனா லாக்டவுனால் தம்பதியால் லண்டனுக்கு திரும்ப முடியவில்லை.
இது குறித்து Hannah கூறுகையில், நான் என் மகள் Millie Winter Graf-ஐ பார்த்தவுடன் பெரும் மகிழ்ச்சியடைந்தேன்.
பின்னர் எங்கள் வாடகைத்தாயை கட்டிபிடித்து உங்களுக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என நானும் என் கணவரும் கூறினோம்.
எங்களுக்கு லண்டனுக்கு திரும்ப வேண்டும் என ஆர்வமாக உள்ளது, ஆனால் தற்போது லாக்டவுனால் லண்டனுக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறோம்.
லண்டனுக்கு திரும்ப அனுமதிக்கும் ஆவணங்களுக்காக காத்திருக்கிறோம்.
அங்கு சென்று எங்கள் குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட வேண்டும் என மிகவும் ஆவலாக உள்ளோம் என கூறியுள்ளனர்.