ஏவுகணை சோதனையின்போது காயமடைந்ததால்தான் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் வெளியுலகுக்கு சிறிது காலம் காணப்படாமல் இருந்திருக்கலாம் என்கிறார் முன்னாள் வட கொரிய அலுவலர் ஒருவர்.
ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி முக்கிய அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளாதது முதற்கொண்டு, அதன் பின் பொது நிகழ்ச்சிகளில் வெளியே தலை காட்டாததால் கிம் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவத்தொடங்கின.
இந்நிலையில், முன்னாள் Workers’ Party கட்சி அலுவலரான Lee Jeong Ho என்பவர் தென் கொரிய செய்தித்தாள் ஒன்றில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 14 அன்று ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதால், அதை கிம்தான் அங்கீகரிக்கவேண்டும் என்பதால், அதுவரை கிம் ஆரோக்கியமாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று கூறும் Lee Jeong Ho, ஆனால் ஏவுகணை சோதனையின்போது அவர் காயமடைந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
அந்த ஏவுகணை சோதனை தொடர்பாக வெளியான முடிவுகளில் கிம் இல்லாததோடு, அது தொடர்பாக எந்த காணொளிக்காட்சியும் வெளியிடப்படாததால், அங்கு தீ அல்லது ஏவுகணை பாகங்கள் சிதறியதால் ஏதோ ஒரு எதிர்பாராத விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்கிறார் Lee Jeong Ho.
Mount Myohayng மருத்துவமனையில் கிம் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படும் செய்தியிலும் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்று கூறும் Lee, கிம்மின் மருத்துவர்கள் Pyongyangஇல் இருப்பவர்கள் என்றார்.
இதற்கிடையில், கிம்மின் உடல் நிலை குறித்து வெளியான வதந்திகளால் மக்கள் உணவுப்பொருட்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கியுள்ளதாக Washington Post பத்திரிகை தெரிவித்துள்ளது.