மலேசியாவை சேர்ந்த ஹிப் ஹாப் பாடகர் யோகி பி. இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இசை ஆல்பங்களை உருவாக்கியிருக்கிறார். இவருடைய ஆல்பத்தில் ‘மடை திறந்து’ பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. இதைப் பார்த்த இசையமைப்பாளர் வித்யாசாகர் விஜய் நடித்த ‘குருவி’ படத்திற்காக ‘ஹேப்பி நியூ இயர்’ பாடலை பாடவைத்தார்.
அதன்பிறகு, ‘பொல்லாதவன்’ படத்தில் ‘எங்கேயும் எப்போதும்’ பாடல் யோகி பி.யை ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாக்கியது. அதன்பின், தமிழில் எந்த பாடலையும் பாடாமல் இருந்த யோகி பி. கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு மீண்டும் வந்திருக்கிறார்.
இவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்திருப்பவர் அனிருத். அனிருத் தற்போது அஜித்தன் 57-வது படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை யோகி பி.யை பாடவைத்திருக்கிறார் அனிருத். 7 ஆண்டுகளுக்கு பிறகு தனக்கு தமிழில் பாட வாய்ப்புக் கொடுத்த அனிருத்துக்கு யோகி.பி நன்றி தெரிவித்துள்ளார்.
அஜித் நடிப்பில் உருவாகிவரும் பெயரிடப்படாத இப்படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்கியிருக்கிறார். காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.