Loading...
தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராகுல் பிரீத் சிங், தற்போது தமிழ், தெலுங்கில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் புதிய படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ராகுல் பிரீத் சிங் அடுத்தாக கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்தபிறகு ‘சதுரங்கவேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில்தான் ராகுல் பிரீத் சிங் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Loading...
இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். அடுத்த வருடம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் பிரீத் சிங் ஏற்கெனவே விஷால் நடிப்பில் உருவாகும் ‘துப்பறிவாளன்’ படத்தில் நடிக்க மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...