கொரோனா வைரஸால் இறந்த பிரித்தானியா மருத்துவரின் மகன், மருத்துவ ஊழியர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது குறித்து நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக்கிற்கு சவால் விடுத்துள்ளார்.
53 வயதான மருத்துவர் அப்துல் மாபூத் சவுத்ரி இந்த மாத தொடக்கத்தில் கொரோனாவால் இறந்தார். அவர் இறப்பதற்கு சில வாரங்களுக்கு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார ஊழியர்களுக்கு கூடுதலாக பாதுகாப்பு உபகரணங்கள் கோரி கடிதம் எழுதினார்.
இந்நிலையில், பாதுகாப்பு உபகரணங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை தீவிரமாக எடுத்துக் கொள்ளாததற்கு வருத்தப்படுகிறீர்களா என்று மறைந்த மருத்துவர் அப்துல் மாபூத் சவுத்ரியின் மகன் இன்டிசார் ஹான்காக்கைக் கேட்டார்.
இதற்கு பதிலளித்த ஹான்காக், உங்கள் தந்தை சொன்னதை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டோம், போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.
என்ஹெச்எஸ்ஸில் பணிபுரியும் எவரேனும் கொரோனா வைரஸால் இறந்துவிட்டால், ஒவ்வொரும் வழக்கிலும் அதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்போம், அவர்களுக்கு எங்கிருந்து நோய் பரவியது மற்றும் அதிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தின் தவறுகளை ஒப்புக் கொள்ள அவர் தயாரா என்று கேட்கப்பட்டதற்கு பதிலளித்த ஹான்காக், இந்த விஷயங்களை எவ்வாறு சிறப்பாகச் செய்வது என்பது பற்றி நாங்கள் தொடர்ந்து கற்றுக் கொள்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன் என கூறினார்.