பிரித்தானியாவில் கொரோனாவுடன் தொடர்புடைய நோய் அறிகுறியால் சில குழந்தைகள் இறந்துவிட்டதாக நாட்டின் சுகாதார செயலாளர் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் எவ்வித சுகாதார குறைப்பாடுகளும் இல்லாத சில குழந்தைகள் அரிதான நோய் அறிகுறியால் இறந்துவிட்டனர்.
இந்த புதிய நோய் அறிகுறி கொரோனா உடன் தொடர்புடையதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர் என சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறினார்.
அதிக காய்ச்சல் மற்றும் உடல் வீக்கம் போன்ற புதிய நோய் அறிகுறிகளுடன் குழந்தைகள் மருத்துவமனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கும் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய நோய்க்கும் இடையிலான தொடர்பு குறித்து இத்தாலிய மற்றும் பிரிட்டிஷ் மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாக நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் நாடு கொரோனாவால் கடும் நெருக்கடியை சமாளித்து வரும் நிலையில் தற்போது புதிய நோய் அறிகுறியால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளது மக்களிடையே கவலை அதிகரித்துள்ளது.