பிடித்தவை என நாம் சாப்பிடும் பெரும்பாலான விஷயங்கள் நமக்கு ஆபத்தைத்தான் ஏற்படுத்துகின்றன.
நமது ஆரோக்கியம் ஒளிந்திருக்கும் இடமென்றால் அது நமது சமையலறைதான். ஆனால் இதில் துரதிர்ஷ்டவசமானது என்னவென்றால் நமது சமையலறையில் இருக்கும் சில பொருட்கள் நமது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.
இதில் சில ஆரோக்கியமான பொருட்களும் இருப்பதுதான் கூடுதல் அதிர்ச்சி. இந்த பதிவில் சமையலறையில் இருக்கும் என்னென்ன உணவுகள் ஆபத்தானவை என்று பார்க்கலாம்.
பழ விதைகள்
ஆப்பிள் மற்றும் செர்ரி பழங்களின் விதைகளிலும் ப்ருசிக் அமிலம் எனப்படும் ஒரு வகை ஹைட்ரஜன் சயனைடு உள்ளது.
இந்த பழங்களின் விதைகளை சாப்பிட்டால் வாந்தி, மயக்கம், தலைசுற்றல், சிறுநீரக செயலிழப்பு, சிலசமயம் மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம்.
ருபார்ப் இலைகள்
ருபார்ப் இலைகளில் ஆக்ஸாலிக் அமிலம் உள்ளது, இது சிறுநீரக கற்களை ஏற்படுத்துகிறது.
இந்த இலைகளை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்வது மூச்சு விடுவதில் சிரமம், பக்கவாதம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். 11 பவுண்டுகளுக்கு மேல் இந்த இலைகளை எடுத்துக் கொள்வது மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம்.
ஜாதிக்காய்
ஜாதிக்காயை உணவின் சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படும் ஒரு பொருளாகும். ஆனால் உண்மையில் இது உங்களுக்கு சில மாயத்தோற்றங்களை உருவாக்கக்கூடும்.
ஜாதிக்காயை 0.2 அவுன்ஸ் சேர்த்துக் கொள்வது மனஉளைச்சலை ஏற்படுத்தும். 0.3 அவுன்ஸ் எடுத்துக்கொள்வது வலிப்பைக் கூட ஏற்ப்டுடும். ஜாதிக்காயை முழுதாக சாப்பிடுவது மனநோயையே ஏற்படுத்தும். இது வரவிருக்கும் அழிவின் உணர்வை உள்ளடக்கியது.
தேன்
தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் நீக்கப்படும் பதப்படுத்தும் செயல்முறை செய்யப்படாத கலப்படமில்லாத தேனில் பெரும்பாலும் கிரயனோடாக்சின் உள்ளது.
இது தலைச்சுற்றல், பலவீனம், அதிகப்படியான வியர்வை, குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஒரு கரண்டி கிரயனோடாக்சின் எடுத்துக் கொள்வது இந்த விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கு மேல் எடுத்துக் கொள்வது அதைவிட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மரவள்ளி கிழங்கு
மரவள்ளிக்கிழங்கின் இலைகள் மற்றும் வேர்கள் வியக்கத்தக்க வகையில் சயனைடு நிறைந்தவை. கசாவா என்பது வெப்பமண்டல காய்கறியாகும், இது முதலில் தென் அமெரிக்காவிலிருந்து வந்தது, ஆனால் ஆப்பிரிக்காவில் பிரபலமடைந்துள்ளது, குறிப்பாக அதன் சாறுக்காக, இது பிவாரி எனப்படும் ஒரு பானத்தை தயாரிக்க புளிக்க வைக்கப்படுகிறது. இது நமக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.