வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னின் உடல் நிலை குறித்து தொடர்ந்து சந்தேகங்கள் வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது. அவரின் உடல்நிலை குறித்து இன்னும் அதிகாரபூர்வ செய்தி எதுவும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் அதிபர் கிம் ஜோங் உன்னின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக வடகொரியாவுக்கு 5 அதி நவீன உளவு விமானங்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பி உள்ளார்.
கிம் ஜோங் இருப்பதாக சந்தேகிக்கப்படும் வான்சோன் பகுதியில் இந்த விமானங்கள் பறக்க விடப்பட்டுள்ளது. டிரோன் வகை விமானமான இது ரேடாரில் சிக்காது.
இந்த விமானங்கள் வானத்தில் இருந்து கொண்டே ஒட்டுக்கேட்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வானத்தில் பறந்தபடியே தரையில் நடக்கும் விஷயங்களை புகைப்படம் எடுக்கும். மிக துல்லியமாக புகைப்படம் எடுக்கும். வெப்பநிலை மூலம் புகைப்படம் எடுக்க கூடிய டெம்பரேச்சர் புகைப்பட கருவிகளும் இதில் உள்ளது. மூன்று Beechcraft RC-12 மற்றும் இரண்டு EO-5C ‘Crazy Hawk’ விமானங்களை அமெரிக்கா வடகொரியாவுக்கு அனுப்பி உள்ளது.
இந்த விமானங்கள் கீழ இருக்கும் பகுதியில் யாராவது கைபேசி மூலம் பேசினால் அதன் எலக்ட்ரோமேக்னெட்டிக் சிக்னல்களை கண்டுபிடித்து அதை ஒட்டுக்கேட்கும் திறன் கொண்டது.
மற்ற விதமான ஒன்லைன் பேச்சுவார்த்தைகளையும் கண்டுபிடித்து டிராப் செய்யும் திறன் கொண்டது. அதேபோல் ஒரு குறிப்பிட்ட நபரை இதன் மூலம் மிக எளிதாக டிராக் செய்ய முடியும்.