Loading...
ஸ்ரீலங்கா விமானப்படையிலும் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விமானப்படையில் இசை வாத்தியப் பிரிவில் சேவையாற்றிய கோப்ரல் ஒருவருக்கே கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப்பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
Loading...
இதனால் கட்டுநாயக்கவில் ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்பிலிருந்த 65 விமானப்படை வீர வீராங்கனைகள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள வீரர்களையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே பணிக்கு இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
Loading...