Loading...
வெங்காயத்தில் இருக்கும் காரத் தன்மைக்கு, அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய்யே காரணமாக உள்ளது.
இந்த எண்ணெய் இருப்பதால், தான் வெங்காயத்தை நறுக்கும் போது, நமது கண்களில், கண்ணீர் வருவதோடு, நெடியும் ஏற்படுகிறது.
Loading...
வெங்காயத்தில் விட்டமின்கள், புரதச்சத்துக்கள், தாது உப்புகள் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிகமாக நிறைந்துக் காணப்படுகிறது.
வெங்காயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- வெங்காயத்தில் இருக்கும் கூட்டுப் பொருள்கள் நமது உடம்பின் ரத்தத்தில் அதிகமாக கொழுப்புகள் சேர்வதை கரைத்து, நமது உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
- நமது சிறுநீர்ப்பையில் அதிகமாக யூரிக் அமிலம் சேர்வதால் கற்கள் ஏற்படுகிறது. எனவே நமது உணவில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக் கற்களை கரைத்து, மூட்டு அழற்சி போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.
- வெங்காயத்தில், மன அழுத்தம், களைப்பு போன்ற பிரச்சனை போக்கும் செலனின் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. அதிகமான மன அழுத்தம் இருப்பவர்கள், வெங்காயம் மற்றும் பூண்டை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.
- சிறிய வெங்காயத்தின் சாற்றில், தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், சீதோஷண நிலை, இருமல், நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- வெங்காயத்துடன் சிறிதளவு வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால், மன இறுக்கம், செல் சிதைவுகள், பித்தம், ஏப்பம், வயிற்றுக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- வெங்காயச் சாற்றை வெந்நீரில் கலந்து, தினமும் வாய் கொப்பளிப்பது அல்லது வெங்காயச் சாற்றில் பஞ்சை நனைத்து, பற்களில் தடவி வந்தாலும் பல்வலி, ஈறுவலி போன்ற பிரச்சனைகள் வராது.
Loading...