Loading...
நமக்கு தூக்கம் ஆரோக்கியமானதாக இருந்தாலும் பகல் நேரத்தில் உணவை சாப்பிட்டவுடன் தூங்குவது, இரவில் தூங்குவதற்கு முன் சாப்பிடுவது இது போன்ற செயல்கள் நமக்கு பல ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
Loading...
எனவே நாம் தினமும் பகலில் உறங்குவது, சாப்பிட்டவுடன் உறங்குவது போன்ற செயல்களால் நமது உடலுக்கு ஏற்படும் விளைவுகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
உணவு சாப்பிட்டதும் உறங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்
- நாம் உணவு சாப்பிட்டதும் தூங்குவதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. ஏனெனில் கலோரிகள் நிறைந்த உணவை நாம் சாப்பிட்டவுடன் உறங்குவதால் உடல் பருமன் விரைவில் அதிகரித்து விடுகிறது.
- உணவு உட்கொண்ட உடனே தூங்கினால், நெஞ்செரிச்சல் ஏற்படும். ஏனெனில் உணவு உண்ட பின் தூங்குவதால், நமது உடம்பின் உணவுக்குழாய் வழியாக இரைப்பில் உள்ள அமிலமானது மேலே ஏறி, நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது.
- ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், உணவை உட்கொண்ட உடனேயே தூங்கக் கூடாது. ஏனெனில் அவர்களின் உடம்பில் உள்ள இரைப்பையின் உணவுக்குழாயில் எதிர்வினையை உண்டாக்கி இருமல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
- உணவு உட்கொண்டதும் தூங்க சென்றால், பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. எனவே உணவு சாப்பிட்டவுடன் தூங்குவது மிகவும் ஆபத்தானது.
- இரவில் சாப்பிட்டவுடன் தூங்க சென்றால், தூக்கமின்மை பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது மது அருந்தினாலோ இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது.
Loading...