Loading...
சீன நிறுவனமான ByteDance உருவாக்கிய வீடியோ டப்பிங் அப்பிளிக்கேஷனான TikTok உலக அளவில் மிகவும் பிரபலமடைந்துள்ளமை தெரிந்ததே.
இந்நிலையில் தற்போது சுமார் இரண்டு பில்லியன் தரவிறக்கத்தினை குறித்த அப்பிளிக்கேஷன் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுளின் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப்ஸ் ஸ்டோர் இரண்டிலுமாக இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது.
Loading...
1.5 பில்லியன் எனும் மைல்கல்லை கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் எட்டியிருந்த நிலையிலேயே இந்த வருடத்தின் முதலாவது காலாண்டு நிறைவில் 2 பில்லியன் எனும் அடுத்த மைல்கல்லை அடைந்துள்ளது.
இதுவரை எந்தவொரு அப்பிளிக்கேஷனும் ஒரு காலாண்டில் 315 மில்லியன் தரவிறக்கங்களை தாண்டியதில்லை.
ஆனால் கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக இச் சாதனையை TikTok நிலைநாட்டியுள்ளது.
Loading...