தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் இருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் காதல் பல காதல் சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், அதில் இருந்து மீண்டு இன்று நபர் ஒன் நடிகையாக வளம் வருகிறார்.
விக்னேஷ் சிவனுடன், காதல் பயணத்தை சந்தோஷமாக தொடரும் இவர், அடிக்கடி இவர்கள் வெளியில் செல்வதை, புகைப்படத்துடன் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், தெலுங்கிலும் நயன்தாரா நிறைய படங்களில் நடித்திருந்தாலும் கடந்த 2011 ஆம் ஆண்டு பாலகிருஷ்ணாவுடன் இணைந்து அவர் நடித்த ஸ்ரீ ராம ராஜ்யம் என்ற படம் அவருக்கு மிகவும் முக்கியமானது.
இந்த படத்தில் நயன்தாரா சீதையாக நடித்து இருந்தார். பாலகிருஷ்ணா அவர்கள் ராமராக நடித்து இருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங்கை நல்ல படியாக முடித்து கொடுத்ததற்காக நயன்தாரா மீது படக்குழுவினர் மலர்கள் தூவி வாழ்த்து கூறினார்கள்.
இதனை சற்றும் எதிர்பாராத நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டிலையே ஆனந்த கண்ணீரில் அழுதார். அவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டு இயக்குனரிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று கொண்டார் நயன்தாரா. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.