பிரித்தானியாவில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவது குறித்த விவரங்களை அறியும் விரிவான திட்டம் அடுத்த வாரம் வெளிவ்ரும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் எந்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பையும் மேற்கொள்ளவில்லை.
இந்த வாரம் அவர் செய்தியாளர்களை சந்திப்பார், சில தகவல்களை வெளியிடுவார் என்று கூறப்பட்டிருந்தது,
அதன் படி இன்று மாலை பேசிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், ஊரடங்கு உத்தரவை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு விரிவான திட்டம் அடுத்த வாரம் அரசாங்கம் வெளியிடும்.
பொருளாதாரத்தை எவ்வாறு நகர்த்துவது, பள்ளிகளை மீண்டும் திறப்பது மற்றும் மக்களை மீண்டும் வேலைக்கு செல்ல அனுமதிப்பது போன்ற தகவல்கள் குறித்து பேசினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், என்.ஹெச்.எஸ் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
சுகாதார சேவையைப் பாதுகாப்பதற்கும், கட்டுப்படுத்த முடியாத மற்றும் பேரழிவு தரக்கூடிய தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கும் பொதுமக்களின் பாரிய கூட்டு முயற்சிக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும், இந்த வைரஸைத் தோற்கடிப்பதற்கான தீர்மானத்தில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. முழு நாட்டையும் அதன் காலடியில் இருந்து நிச்சயம் திரும்ப பெறுவோம்.
அந்த செயல் முறையின் முதல் படியாக, அடுத்த வாரம் ஒரு விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதில், நமது பொருளாதாரத்தை எவ்வாறு நகர்த்துவது, நம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது மற்றும் குழந்தை பராமரிப்பு, போன்றவைகளில் நாம் எவ்வாறு இதன் பின் பயணிக்க முடியும் போன்ற தகவல்கள் இதில் இருக்கும்.
வேலை மற்றும் பணியிடத்தில் வாழ்க்கையை பாதுகாப்பானதாக்குங்கள், சுருக்கமாக, நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது, அதே நேரத்தில் பொருளாதாரத்தை மீண்டும் எப்படி தொடங்குவது? போன்ற பெரிய அளவிலான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு முன் அரசாங்கத்திற்கு ஒரு திருப்தியான புள்ளி விவரங்கள் தேவை என்று ஐந்து நிபந்தனைகள் முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அது குறித்து போரிஸ் கூறுகையில், NHS நோயாளிகளை சமாளிக்கும் திறனைப் பாதுகாக்க வேண்டும். இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவதை நாம் காண வேண்டும்.
குறிப்பாக கொரோனாவின் இரண்டாவது அலை வீசும் அபாயத்தை நாம் தவிர்க்க வேண்டும் என்பதல் ஜூன் மாதம் வரை தான் ஊரடங்கை நீட்டிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
இதனால் அடுத்த வாரம் வெளி வரும் திட்டம், நீங்கள் பெறப் போகும் ஒரு வரைபடம் என்றே நான் கூறுவேன்.
அதில், ஒவ்வொரு தனிப்பட்ட நடவடிக்கையின் திகதிகளும், நேரங்களும் நாம் தொற்றுநோய்களில் எங்கு இருக்கிறோம், தரவு என்ன என்பதை நாம் அறிய முடியும் என்று கூறியுள்ளார்.