கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதாகவோ அல்லது மரபணு மாற்றமாகவோ இல்லை என்று அமெரிக்க தேசியப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும் இந்த வைரஸின் தோற்றம் குறித்து தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக அமெரிக்காவின் தேசியப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ், விலங்குகளின் தொடர்பிலிருந்து தொடங்கப்பட்டதா அல்லது ஆய்வுக்கூட விபத்தில் இருந்து ஆரம்பித்ததா? என்று தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க தேசியப்புலனாய்வுத்துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஆய்வுக்கூடம் ஒன்றில் இருந்தே கொரோனா வைரஸ் வெளிவந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக ஏற்கனவே ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையிலேயே தேசியப்புலனாய்வு பிரிவினரின் கருத்து வெளியாகியுள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஆரம்பித்த இந்த வைரஸினால் இதுவரை இரண்டு லட்சம் பேர் வரை காவு கொள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.