சீனாவில் பாம்பை பச்சையாக சாப்பிட்ட இளைஞரின் நுரையீரலில் புழுக்கள் அடைத்துக்கொண்டதால் தற்போது தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கடல் உணவு சந்தையிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக மக்களின் உயிரைக் காவு வாங்கிக்கொண்டிருக்கின்றது.
குறித்த தொற்று வவ்வால்களிடமிருந்து பரவியிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் பாம்புகளிடமிருந்தும் பரவியிருப்பதாக கூறப்படுகின்றது.
அதாவது காட்டில் இருக்கும் பாம்புகள் உணவுக்காக அடிக்கடி வவ்வால்களை கூட வேட்டையாடி சாப்பிடுமாம்.
சீனாவில் நிறைய கட்டுவிரியன், நல்ல பாம்புகள் உள்ளன.. இந்த பாம்பின் உடம்பெல்லாம் நிறைய உடலில் வளையங்கள் காணப்படும்.. விஷமுள்ள கட்டுவிரியன் பாம்புகளும் சீனாவில் அதிகம்.
அதனால் இந்த 2 வகையான பாம்புகளில் ஏதாவது ஒன்றில் இருந்தே இந்த வைரஸ் பரவியிருக்க கூடும் என்ற ஆராயச்சியும் நடக்கிறது. இந்த சமயத்தில் தற்போது அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த வாங் என்ற இளைஞர் திடீரென மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் அவரிடம் சாப்பிட்ட உணவுகளைப் பற்றி கேட்டுள்ளார். அதற்கு இளைஞர் கடல் உணவு சாப்பிட்டதாகவும், அதிகமான நத்தைகள் சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனாலும் மருத்துவருக்கு சந்தேகம் இருந்ததால், மீண்டும் இளைஞரிடம் நன்றாக யோபகப்படுத்தி கூறுங்கள் என்று கூறியுள்ளார். பின்பு இளைஞர் ஆமா நான் பாம்பை சாப்பிட்டேன் என்றும் அந்த பாம்பின் பித்த பையை பச்சையாகவே சாப்பிட்டதாக மருத்துவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
பின்பு உடனடியாக ஸ்கேன் செய்து பார்த்தபோது, இளைஞரின் நுரையீரலில் குட்டி குட்டியாக புழுக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார்.
உயிரினங்களை இப்படி பச்சையாக உண்பதால், அதில் உள்ள புழுக்களின் முட்டை உடலுக்குள் சென்றுவிடும். பிறகு அதுவே கொடிய நோயாக பின்னாளில் மாறும் என்கின்றனர். பாம்பை பச்சையாக முழுங்கிவிட்டு, அதில் இருந்து புழுக்கள் வெளியேறி உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.