எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். நிகழ் கால தேவைகள் பூர்த்தியாகும். மாலை நேரத்தில் மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறும்.
முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முன்னேற்றம் காண முடிவெடுக்கும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். கட்டிடப்பணி பாதியில் நிற்கிறதே என்ற கவலை மாறும்.
அடிப்படை வசதிகளைப் பெருக் கிக் கொள்ளும் நாள். ஆரோக்கியப் பாதிப்புகள் அகலும். பூர்வீக சொத்துக்களிலிருந்த பிரச்சினைகள் தீர புது வழியைத் தேர்ந்தெடுப்பீர்கள். வரவு திருப்தி தரும்.
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத் திடும் வாய்ப்பு உண்டு. எதிலும் அவசரப்படாமல் செயல்படுவது நல்லது. அரசுவழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கலாம்.
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிட்டும். திட்டமிட்ட காரி யத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் வழியில் விரயம் ஏற்படலாம்.
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். அதிகம் செலவா குமே என்று நினைத்த காரியம் குறைந்த செலவிலேயே முடிவடையும். குடும்ப உறுப்பினர்களினால் குழப்பங்கள் உருவாகலாம்.
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நிழல் போல தொடர்ந்து வந்த கடன் சுமை குறையும். ஆரோக்கியத் தொல்லை அகலும். உறவினர் வழியில் வந்த மனக்கசப்புகள் மாறும்.
அவசர முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டிய நாள். வரவை விட செலவு கூடும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் ஓரளவே கிடைக்கும். நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
திடீர்ப் பயணங்களால் திகைப் படையும் நாள். சொத்துக்களால் ஒத்துழைப்பு கிடைக்கும். சொந் தங்களின் ஒத்துழைப்பு கொஞ்சம் குறைவாகவே இருக்கலாம். குடும்பச் சுமை கூடும்.
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய சந்தர்ப்பங்களை உப யோகப்படுத்திக் கொள்ளலாமா? என்று சிந்திப்பீர்கள். காலை நேரத்தில் கலகலப்பான தகவல் வந்து சேரும்.
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உதிரி வருமானங்கள் உயரும். வாயில் தேடி வந்த வரன் கள் விட்டுப் போனதை எண்ணி கவலைப்படுவீர்கள். வீடுமாற்றச் சிந்தனைகள் மேலோங்கும்.
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். நாட்டுபற்று மிக்கவர்கள் உங்கள் வீட்டு முன் னேற்றத்திற்கு ஒத்துழைப்பாக இருப்பர். தொழிலில் எதிர்பார்த்த படியே லாபம் கிடைக்கும்.