இரண்டு முறை இதயம் துடிக்க மறந்து, கோமா நிலை வரை சென்ற பின்னரும், பிரித்தானியர் ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள அதிசய சம்பவம் பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளது.
Scott Howell (48) என்னும் அந்த அதிசய மனிதரை மருத்துவமனையிலிருந்து மருத்துவர்களும் செவிலியர்களும் சக்கர நாற்காலி ஒன்றில் வைத்து வீட்டுக்கு அனுப்பும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அவர் வீட்டுக்கு அனுப்பப்படும்போது, மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்களும் செவிலியர்களும் அவரை கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தி அனுப்பிவைக்க, அவரும் அவர்களுக்கு தன் நன்றியை தெரிவிக்கும் விதமாக பதிலுக்கு கைகளைத் தட்டுவதை அந்த வீடியோவில் காணலாம்.
ஏழு வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த Scottஇன் இதயம் இரண்டு முறை நின்றுவிட்டிருக்கிறது.
கோமா நிலைக்கும் சென்றிருக்கிறார் Scott. இருந்தும், அதிசய விதமாக கொரோனாவிலிருந்து மீண்டுள்ள Scott, ஏழு வாரங்களுக்குப் பிறகு, தன் குடும்பத்துடன் இணைந்துகொண்டிருக்கிறார்.
வாழ்நாளெல்லாம் இந்த சேவைக்கு நன்றியுடையவனாக இருப்பேன் என்று கூறும் Scott, எனக்காக பிரார்த்தனை செய்தவர்கள், என்னை நினைவு கூர்ந்து எனக்கு குறுஞ்செய்திகள் அனுப்பியவர்கள் (அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது) மற்றும் என்.ஹெச்.எஸ்க்கு எனது மனமார்ந்த நன்றி என்கிறார்.