உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு தலைவர் டாக்டர் ஹான்ஸ் குலுாக் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய மண்டலத்தில் உள்ள 44 நாடுகளில் 21ல் ஏற்கனவே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
எஞ்சிய 11 நாடுகளில் அடுத்த சில நாட்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. சமூக விலகல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது.
இருப்பினும் நான்கில் மூன்று பங்கு நாடுகளில் வைரஸ் தீவிரமாகவே உள்ளது என அவர் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பாவில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.35 லட்சம் ஆக உயர்ந்தது.
13.73 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ஸ்பெயினில், 2,39,639 பேர் (பலி – 24,543) கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் 2,05,463 பேர் (பலி – 27,963), பிரித்தானியாவில் 1,71,253 பேர் (பலி – 26,771), பிரான்சில் 1,67,178 பேர் (பலி – 24,376), ஜேர்மனியில் 1,63,009 பேர் (பலி – 6,623), ரஷ்யாவில் 1,06,498 பேர் (பலி – 1,073) பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.