Loading...
வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்தமையால் அரச ஊழியரான இளம்பெண் சாவடைந்துள்ளார்.
குறித்த பெண் நேற்றயதினம் இரவு அவரது வீட்டு கிணற்றில் விழுந்துள்ளார். அதனை அவதானித்த உறவினர்கள் அயலவர்களின் உதவியுடன் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர் எனினும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளார்.
Loading...
குறித்த சம்பவத்தில் செட்டிக்குளம் பிரதேசசபையில் பணியாற்றும் திருக்கேதீஸ்வரநாதன் கலைவாணி என்ற பெண்ணே சாவடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...