கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.5 மில்லியனை நெருங்கி வருகிறது. 244,000 இற்கும் அதிகமான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 65,000 இற்கும் அதிகமான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, கொரோனா வைரஸ் வுஹானில் உள்ள ஒருஆய்வுகூடத்த்தில் இருந்து உருவாகியுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறிவரும் நிலையில், கொரோனா வைரஸ் “இயற்கையானது” என்று உலக சுகாதார அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
கொரோனா வைரசினால் இதுவரை 3,479,875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 244,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,108,065 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் 5,148 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்கா
கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் 1,643 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 67,396 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 28,534 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 1,159,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டன்
கடந்த 24 மணித்தியாலத்தில் பிரிட்டனில் 621 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 28,131 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 4,806 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 182,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலி
இத்தாலியில் நேற்று 474 பேர் உயிரிழந்தனர். இதுவரை அங்கு 28,710 பேர் உயிரிழந்தனர். புதிதாக 1,900 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 209,328 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் வெள்ளிக்கிழமை 269 பேரே உயிரிழந்த நிலையில் நேற்று திடீர் அதிகரிப்பு ஏற்பட்டது.
பிரேசில்
நேற்று 340 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 6,750 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 4,450 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 96,559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெயின்
கடந்த 24 மணித்தியாலத்தில் 276 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 25,100 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 2,588 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 245,567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினில் தொற்றை கட்டுப்படுத்த பொதுப்போக்குவரத்தில் முகக்சவசம் கட்டாயமாக்கப்படவுள்ளது. திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் 6 மில்லியன் முகக்கவசங்களை அரசு வழங்கவுள்ளது. அத்துடன், உள்ளூர் நிர்வாகங்கள் மூலம் மேலும் 7 மில்லியன் முகக்கவசங்களை வழங்கவுள்ளது.
உலகின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில், 48 நாட்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டிருந்த அனைத்து மக்களும் நடைப்பயணத்திற்கு செல்ல அல்லது விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினின் கிட்டத்தட்ட 47 மில்லியன் மக்கள் மார்ச் 14 முதல் லொக டவுனில் வாழ்ந்து வருகின்றனர், பெரியவர்கள் உணவு, மருந்து வாங்க அல்லது நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ்
கடந்த 24 மணித்தியாலத்தில் 166 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 24,760 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 1,050 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 168,396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனடா
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 175 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 3,566 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 1,653 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 56,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியா
இந்தோனேசியாவில் 292 புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பதிவாகியுள்ளனஃ இதுவரை, 10,843 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
31 புதிய இறப்புகள் பதிவாகின. இதுவரை 831 மரணங்கள் நிகழ்ந்துள்ளது.
இதுவரை, 79,800 க்கும் மேற்பட்டவர்களை பரிசோதித்ததாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன், சீனாவின் பாணியில் தலைநகர் ஜகார்த்தாவில் மருத்துவமனை ஒன்றையும் அமைத்து வருகிறது. இங்கு கொரோனா நோயாளிகளிற்கு சிகிச்சையளிக்கப்படவுள்ளது.
ஆபிரிக்கா
ஆபிரிக்கா முழுவதும் 40,000 இற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அண்ணளவாக 1,700 மரணங்கள் பதிவாகியுள்ளன.
13,000 இற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.
53 ஆபிரிக்க யூனியனில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளும் இணைந்து வெளியிட்ட புதிய அறிக்கையில் இந்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
#COVID19: Update as of 02/05/2020, 9:00 AM (East Africa Time)
53 African Union Member States reporting #COVID19 40.746 cases, 1.689 deaths, and 13.383 recoveries.
More information on @AfricaCDC dashboard via https://t.co/teDFU1XFLZ#FactsNotFear #AfricaResponds pic.twitter.com/Q8tK2AfARG— Africa CDC (@AfricaCDC) May 2, 2020