Loading...
கொரோனா தொற்றிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 705 ஆக உயர்ந்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, நேற்று 15 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்தார்.
இவர்களில் 12 பேர் கடற்படை உறுப்பினர்களாவர்.
இவர்களில் 10 பேர் விடுமுறையில் தங்கியிருந்தவர்கள். மற்ற இரண்டு பேரும் வெலிசறை கடற்படை தளத்தில் இருந்த கடற்படையினர். ஏனைய 3 பேரும், கடற்படையினரின் உறவினர்கள். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
Loading...
வெலிசறை கடற்படை தளத்தில் நேற்று 200 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று (2) 1681 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
Loading...