பிரான்ஸில் சுகாதார அவசரநிலையை ஜூலை 24ம் திகதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
நேற்று (2) நடைபெற்ற அமைச்சர்கள் ஆலோசனை சபைக் கூட்டத்தின் முடிவில், இந்த அவசரகாலச் சகாதார நிலையை மேலும் இரண்டு மாதங்கள் நீட்டித்து, ஜுலை 24ம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அமுல்ப்படுத்தப்பட்ட அவசர நிலை, மே மாதம் 24ம் திகதி முடிவடைவதால், உடனடியாக சுகாதார அவசரகாலநிலையை நீக்கினால், கட்டுப்பாடுகள் தளர்ந்து, இரண்டாவது கொரோனாத் தொற்றலையை ஏற்படுத்திவிடும் என்றும், அதனைக் கட்டுப்படுத்துவது கடினம் என்றும் தெரிவித்துள்ள பிரதமர் எதுவார் பிலிப், இந்தச் சுகாதார அவசரகாலநிலை நீட்டிப்பை அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிரான்ஸ் நான்காவது இடத்தில் உள்ளது.
பிரான்சில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 1,67,346 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு பலியானோர் எண்ணிக்கை 24,594 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசின் தாக்குதலில் இருந்து இதுவரை 50,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு விதிக்கப்பட்ட சுகாதார அவசரநிலையை, ஜூலை 24ம் தேதி வரை ( இரண்டு மாதங்கள்) நீட்டிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.