தமிழகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் காசியின் வலையில் பிரபல நடிகரின் மகள் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் கட்சி பிரமுகர்கள் பலருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி(வயது 26), சென்னையில் உள்ள ஒரு காலேஜில் பிஏ படித்துள்ளார்.
படிக்கும்போதிருந்தே பெண்களிடம் நெருங்கி பழகி வந்த காசி, புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அதை வைத்து அப்பெண்களை மிரட்டி வந்துள்ளார்.
முதல்முறையாக சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் காசி குறித்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்பிக்கு புகார் செய்யவும்தான் விஷயம் வெளியே வந்தது.
இதையடுத்து, கணேசபுரத்தில் உள்ள காசியின் வீட்டில் அவரது செல்போன், லேப்டாப், 2 ஹார்ட் டிஸ்க், 7 ஏடிஎம். கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
அதில் 100 பெண்களின் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்.
இந்த விஷயத்தில் காசிக்கு உதவிய 4 நண்பர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
பெண்களை ஏமாற்றி சம்பாதித்த பணத்தில், நான்கு அடுக்கு மாடி கொண்ட கட்டிடத்தை கட்டியுள்ளதுடன் வட்டிக்கு பணம்விட்டு சம்பாதித்துள்ளார்.
இதனையடுத்து மோசடி உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் காசியின் மீது புகார் தெரிவிப்பவர்கள் கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது காசியின் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ள நிலையில், விஜபிக்கள், கட்சி பிரமுகர்களிடம் காசி நெருங்கி பழகியுள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான ஆதாரங்களும் கோழிப்பண்ணையில் சிக்கிய காசியின் லேப்டாப்டில் உள்ளதாக கூறப்படுகிறது, இதனால் காசி மீதான விசாரணையும் சூடுபிடித்துள்ளது.