தமிழகத்தின் சென்னை நகரத்தை தாக்கிய வர்தா சூறாவளி காரணமாக இலங்கையின் வான்பரப்பில் அதிகளவான விமானங்கள் பறந்துள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 12 மற்றும் 13 திகதிகளில் இலங்கைக்கு சொந்தமான வான் பரப்பில் பறந்த விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 13ஆம் திகதி மாத்திரம் இலங்கையில் தரையிறங்காமல், இலங்கைக்கு சொந்தமான வான் பரப்பின் ஊடாக பயணித்த விமானங்களில் எண்ணிக்கை 182 என விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் உதவிச் செயலாளர் ரஜித செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
ஒரு நாளில் இலங்கைக்கு சொந்தமான விமான பரப்பில் பயணித்த அதிகமான எண்ணிக்கை இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இலங்கை விமான வான் பரப்பு பயண்படுத்துவதன் வருமானம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவான ஒரு நாளில் இலங்கையில் தரையிறங்காமல் இலங்கையின் விமான பரப்பில் 80 முதல் 90 விமானங்கே பயணிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.