இளைஞர் யுவதிகளுக்கு உரிய பயிற்சியின் பின்னர் தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹூனுபிட்டி கங்காராமயவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…
அனைத்து துறைகளிலும் இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உரிய தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படும். அடுத்தாண்டு முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படும்.
வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கி நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட முடியும்.
அனைத்து துறைகளிலும் பயிற்றப்பட்டவர்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது. எனவே அடிப்படையில் தொழில் துறைகளில் பயிற்சி அளிக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.
ஒவ்வொரு இடங்களுக்கு வரையறுக்காமல் எல்லா இடங்களிலும் தொழில் பயிற்சி வழங்கப்பட வேண்டும். இவ்வாறு பயிற்றப்படுவதன் மூலம் நாட்டை அபிவிருத்தி அடையச் செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.