வடகொரிய அதிபரும், Democratic People’s Republic of Korea கட்சியின் தலைவருமான கிம் ஜாங் உன் கட்சியின் கொள்கை பரப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த தகவலை Workers’ Party of Korea நாளேடான Rodong Sinmun வெளியிட்டுள்ளது.
அதன்படி கட்சியின் கொள்கைகளை செயல்படுத்தவும் தொழிலாளர்களை வழிநடத்தவும் கொள்கை பரப்பாளர்கள் தங்கள் பொறுப்பையும் பங்கையும் நிறைவேற்றி முன்மாதிரியாக இருந்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என கிம் தெரிவித்துள்ளார்.
கிம் ஜாங் உடல் நிலை மோசமாக உள்ளது எனவும் அவர் இறந்துவிட்டார் எனவும் பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கிம் ஜாங் மே தின நாளில் ஒரு உர தொழிற்சாலை நிறைவு விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.
20 நாட்களாக கிம் ஜாங் பொதுவெளியில் தோன்றாத நிலையிலேயே முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.