தமிழகத்தில் பள்ளி மாணவிகள் முதல் இளம் பெண்கள் வரை பலரையும் ஆபாச எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காசிக்கு பின்னால் மிகப் பெரிய கும்பல் இருப்பதாக, இளம் பெண் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில், கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி என்ற சுஜி (28). இவர், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தன்னை பணக்கார வீட்டு பிள்ளை என்பதுபோல் காட்டி பல பெண்களிடம் நட்பாகி உள்ளார்.
இவர்களில் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் அறிமுகமானார். நாளடைவில் அவருடன் நெருக்கமாக இருந்தபோது, புகைப்படங்கள், வீடியோக்களை சுஜி எடுத்து வைத்து, அதன் பின் அந்த வீடியோவை காட்டி பணத்தை மிரட்டி வாங்கி உள்ளார்.
இதையடுத்து அந்த பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில், காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
அவனிடம் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஏராளமான பெண்களை சீரழித்ததும், 200 பெண்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.
அவரது லேப்டாப், செல்போனில் பல்வேறு வீடியோ காட்சிகள் உள்ளிட்ட பல முக்கிய தடயங்கள் கிடைத்தன.
எனவே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் பொலிசார் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில், காசி ஒரு காமக்கொடூரன். பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்துள்ளார்.
அவர்களில் ஒரு மாணவி, சப்இன்ஸ்பெக்டரின் மகள் ஆவார் என்று தெரிவித்திருந்தார். அவரை தொடர்ந்து பலரும் ஆதாரங்களுடன் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ ஒன்றில் இளம்பெண் ஒருவர் கூறுகையில், காசி கும்பலால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி, தற்போது நான் இந்தியாவில் இல்லை. எனவே இந்த தகவலை குமரி மாவட்ட பொலிசாரிடம் தெரிவிக்க வேண்டும்.
காசி தனி ஆள் இல்லை, அவர்கள் மிகப்பெரிய கும்பலாக சேர்ந்து செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களின் குரூப் போட்டோவில் முக்கிய கூட்டாளிகளின் படங்களும் உள்ளன. அவர்களுக்கும் இதில் தொடர்பு உண்டு. எனவே அவர்களையும் விட்டுவிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.