அவசர கால நிலையின் காரணமாக பணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள கட்டாரிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் செய்திகள் வெளிவந்துள்ளன.
மேலும் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை உடனடியாக கட்டாரிலிருந்து வெளியேறுமாறும் அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தம்மை உடனடியாக இலங்கைக்கு அழைக்குமாறு கட்டாரிலுள்ள இலங்கையர்கள் ஒன்றியம் சமூக வலைத்தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டாரில் பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அங்கு 10 – 12 வருடங்களாக பணி புரிந்த வெளிநாட்டவர்களே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சுமார் 12,000 இலங்கையர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொழிலின்றி இருப்பதாகவும், தம்மை விரைவில் நாட்டுக்கு அழைக்குமாறு கோரி கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.