இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கொரோனா தொற்றுக்கு உள்ளான தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களது பெயரை தனது குழந்தைக்கு சூட்டி தனது பெருந்தன்மையை காட்டியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஏற்கனவே இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்த நிலையில், கேரி சைமண்ட்ஸ் என்ற பெண்ணுடன் காதல் வயப்பட்டார். திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், சைமண்ட்ஸுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது.
இதைத்தொடர்ந்து பொரிஸ் ஜோன்சன் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நிக்கோலஸ் என்ற பெயரை சேர்த்து வில்பிரட் லேவெரி நிக்கோலஸ் ஜோன்சன் என தனது குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளனர்.
இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அண்மையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். எனது உயிரை காப்பாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க வார்த்தை இல்லை என்று அவர் கூறியிருந்தார்.