Loading...
கொழும்பில் குடிசைக் குடியிருப்பில் வாழும் மக்களுக்காக சுமார் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் நாளை முதல் இடம்பெறவுள்ளன.
நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் இது குறித்த பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Loading...
இதன் முதல்கட்டமாக கொழும்பு – 14 சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, எதிரிசிங்க மாவத்தை, சிறிமுத்து உயன அருகில் 1000 வீடுகளை கொண்ட தொடர்மாடி கட்டடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
ஆசிய அபிவிருந்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் இதற்காக 5,950 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. மூன்று வருடங்களுக்குள் இந்த திட்டத்தை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Loading...