ஊரடங்கை அமுல்படுத்தாவிட்டால் 500,000 இறப்புக்கள் ஏற்படும் என எச்சரித்த பிரித்தானிய அறிவியலாளர் ஒருவர், அவரே உத்தரவை மீறி திருமணமான ஒரு பெண்ணுடன் காதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரித்தானிய அரசு அறிவியலாளரான பேராசிரியர் Neil Ferguson (51), ஊரடங்கை அமுல்படுத்தாவிட்டால் பிரித்தானியா 500,000 இறப்புக்களை சந்திக்க வேண்டி வரும் என்று அரசை எச்சரித்தவராவார்.
அவரது எச்சரிக்கையை ஏற்றுத்தான் போரிஸ் ஜான்சன் பிரித்தானியாவில் ஊரடங்கை அமுல்படுத்தியதாக கருதப்படுகிறது.
ஆனால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் கடுமையாக பின்பற்றவேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி வந்த Neil Ferguson, தானே விதிகளை மீறியுள்ளார், அதுவும் ஒரு முறையல்ல, இரண்டு முறை…
திருமணமான Antonia Staats (38) என்ற பெண்ணுடன் தொடர்பிலிருக்கும் Ferguson, தன்னைக் காண்பதற்காக அந்த பெண்ணை இருமுறை தன் வீட்டுக்கு வர அனுமதித்துள்ளார்.
திருமணமாகி இரண்டு குழந்தைகள் மற்றும் தன் கணவனுடன் தெற்கு லண்டனில் வசிக்கும் Antonia, குறைந்தது இரு முறை விதிகளை மீறி பயணித்து வந்து Fergusonஐ சந்தித்துள்ளார்.
பிரபல பத்திரிகையாளர் ஒருவர், அறிவியலாளர்கள் சொல்வதை நாடே பின்பற்றுகிறது, ஆனால் தாங்கள் சொன்னதை அறிவியலாளர்களே பின்பற்றுவதில்லை, அவமானம் என Fergusonஐ கடுமையாக விமர்சித்திருந்தார்.
கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து, தான் செய்த தவறுக்காக நேற்றிரவு மன்னிப்புக் கேட்டுக்கொண்ட Ferguson தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.