இன்ஸ்டாகிராமில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ய சிறுவர்கள் திட்டமிட்ட சம்பவம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் சமூக வலைதளங்கள் #BoysLockerRoom என்பது டிரெண்டாகி வருகிறது.
புகைப்பட பகிர்வது, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை சிறுவர்கள் பதிவிடுவது, அநாகரிகமான கருத்துக்களை கூறுவது, பாலியல் வல்லுறவு செய்வது பற்றி பேசுவது உள்ளிட்டவை இதன் மூலம் அரங்கேறியுள்ளது.
இதனை தொடர்ந்து டெல்லி மகளீர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால், சம்பந்தப்பட்ட சிறுவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர், குறிப்பிட்டுள்ளது இன்ஸ்டாகிராமில் #BoysLockerRoom என்ற குழுவை சில சிறுவர்கள் உருவாக்கியுள்ளனர். அதில் அவர்கள் சிறுமிகளின் ஆட்சேபத்திற்குரிய புகைப்படங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், எவ்வாறு பாலியல் வல்லுறவு கொள்வது என்பதை பற்றி விவாதிக்கிறார்கள்
சில பெண்கள் இந்த குழுவில் பகிர்ந்துக் கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றங்களின் சில ஸ்கிரீன் ஷாட்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர், அதன் பிறகுதான் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த ஸ்கிரீன் ஷாட்களை சுவாதி மாலிவால், காவல்துறை மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார், உடனடியாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனை அடுத்து சுவாதி மாலிவாலின் டிவீட்டுக்குப் பிறகு, டெல்லி போலீசாரும் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. சைபர் கிரைம் பிரிவு, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு டி.சி.பி அளித்த அறிக்கையில், “இந்த விவகாரம் குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக 15வயது சிறுவன் ஒருவனை காவலில் எடுத்து விசாரித்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Breaking –
DCW chief @SwatiJaiHind issues notice to Instagram and Delhi Police in the matter of a group named "boys locker room" being used by some miscreants to share objectionable pictures of minor girls and planning illegal acts such as rape of minor girls. #boyslockerroom pic.twitter.com/PyzxGCv7kt
— Delhi Commission for Women – DCW (@DCWDelhi) May 4, 2020