Loading...
உலகறிந்த இலக்கியவாதியும், எழுத்தாளருமான முல்லைமணி 13.12.2016 செவ்வாய்க்கிழமை மாலை வவுனியாவில் காலமானார். இறக்கும்போது இவருக்கு எண்பத்து மூன்று வயது. இவர் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர்.
Loading...
அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் தமது எழுத்துலகப் பங்களிப்பை வழங்கியுள்ளார். இதன் காரணமாக சாகித்திய ரத்னா என்ற அதியுயர் விருதை இலங்கை அரசு 2016ஆம் ஆண்டு வழங்கி கௌரவித்தது. அடங்காப்பற்று வன்னிப் பிரதேசத்திற்குக் கிடைத்த அதியுயர் விருதும் இதுவாகும். அவரது இழப்பு இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
Loading...