கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்கு இலக்கான நிலையில் ஐ டி எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இரண்டு கடற்படை வீரர்கள் நேற்று முழுமையாக குணமடைந்த நிலையில் வெளியேறியதாக கடற்படை தெரிவித்துள்ளது.
விடுப்பில் இருந்த இரண்டு கடற்படை நபர்களும் ஏப்ரல் 26 ம் திகதி அனுராதபுர மற்றும் அகலவத்தா மருத்துவமனைகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டவேளை கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் அவர்கள் சிகிச்சைக்காக ஐ.டி.எச் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த நோயாளிகள் இருவருக்கும் பி.சி.ஆர் சோதனைகள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டநிலையில் நேற்று மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
மேலும், விடுப்பில் இருந்த இந்த இரண்டு கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஐடிஎச் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்த இருவரையும் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு நபர்கள் உட்பட, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நான்கு கடற்படை வீரர்கள், முழுமையான குணமடைந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.