பிரித்தானியாவில் ஊரடங்கை மீறி பூங்கா ஒன்றில் கூடியிருந்த இளைஞர்களை கலைந்துபோகச் சொன்ன பொலிசார் ஒருவர் அவமதிக்கப்பட்டார்.
பிரித்தானியாவின் Slough பகுதியில், PCSO என்னும் பொலிஸ் துணை அலுவலர் ஒருவர்பூங்கா ஒன்றில் கூடியிருந்த இளைஞர்களை அங்கிருந்து கலைந்து போகுமாறுகூறியுள்ளார்.
அந்த இளைஞர்களோ அங்கிருந்து உடனே கலைந்து செல்லாததோடு, அந்த அலுவலரை கேலி செய்யத் தொடங்கியுள்ளனர்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஒரு இளைஞர் அவரது சைக்கிளை எடுத்துக்கொண்டுஓட, மற்றவர்கள் உங்கள் சைக்கிள் எங்கே ஆபீசர், எப்படி வீட்டுக்குப் போவீர்கள் என கேலி செய்யத் தொடங்குகிறார்கள்.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், அவர்கள் அந்த அலுவலரை கேலி செய்த வண்ணம் அவரைசுற்றிச் சுற்றி வீடியோ எடுப்பதைக் காண்லாம்.
அவரோ கைகளை விரித்தபடி, நான் என் கடமையைத்தானே செய்தேன் என அவமான உணர்வுடன் ஒன்றும் செய்ய இயலாமல் நிற்பதைக் காணலாம்.