தமிழகத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் அன்றாடம் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது வெளியான தகவலில் ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 3,275 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், சென்னையில் ஒரே நாளில் 324 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2328 ஆக உயர்ந்துள்ளது. பதிவாகியுள்ள 771 பேரில் பெரும்பாலானோர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.